இந்தியா

இந்திய விவசாயிகளுக்கு பெருகும் சர்வதேச ஆதரவு: கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தீர்மானம்!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளுக்கு பெருகும் சர்வதேச ஆதரவு: கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என பல்வேறு சர்வதேச பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய விவசாயிகளுக்கு பெருகும் சர்வதேச ஆதரவு: கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தீர்மானம்!

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனடா நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கான சர்வதேச ஆதரவு என்ற இந்த தீர்மானத்திற்கு முக்கியத்துவம் அளித்து கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதை கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சி முன்மொழிந்தது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைக் கண்டிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் நடவடிக்கைகளைக் கனடா அரசு கண்டிக்க வேண்டும்.

டெல்லியில் விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories