இந்தியா

“கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன” : கொரோனாவை எப்படி தடுக்கப்போகிறது மோடி அரசு?

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன” : கொரோனாவை எப்படி தடுக்கப்போகிறது மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.

இந்நிலையில் தற்போதுவரை 9 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசுகள் கூறி உள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள் கூறுகையில், தடுப்பூசி மருந்து வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், முதல் டோஸ் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவிப்பதோடு, முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 2 வது டோஸ் தங்களால் சரியான நாளில் போட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய அரசோ முரண்பட்ட தகவலை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடி அரசு அனைவருக்கும் தடுப்பூசியைக் கொண்டுச் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories