இந்தியா

“மோடி ஆட்சியில் பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது” : நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் !

மோடி ஆட்சியில், மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

“மோடி ஆட்சியில் பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது” : நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான முதற்கட்டத் தேர்தல்சனிக்கிழமையன்று துவங்குகிறது. இதில், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அசாமில் 47 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அசாம்தான் எனது 2வது வீடு. 5 ஆண்டுகள் நிதியமைச்சராகவும் 10 ஆண்டுகள் பிரதமராகவும் நான் பணியாற்ற அசாம் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர்.

சுமார் 28 ஆண்டுகள் நான் இந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினர். மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் 2001-2016 ஆட்சிக் காலத்தில் அசாமில் புதிய அத்தியாயம் தொடங்கியது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்தது.

“மோடி ஆட்சியில் பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது” : நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் !

ஆனால் இப்போது மதம், இனம், மொழிரீதியாக மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது. அவசரகதியில் அமல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. எனவே இந்த நேரத்தில் அசாமின் அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்து சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களிக்க வேண்டுகிறேன்.

banner

Related Stories

Related Stories