இந்தியா

“அம்பானியின் மனைவியாக இருப்பதெல்லாம் சாதனையா?” - வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு நீதா அம்பானியை வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

“அம்பானியின் மனைவியாக இருப்பதெல்லாம் சாதனையா?” - வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு மாணவர்கள் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது பனாரஸ் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் மகளிர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையத்திற்குத் தொழிலதிபர் அம்மானியின் மனைவி நீதா அம்பானி, தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மனைவி உஷா மிட்டல் ஆகிய இருவரையும் வருகைதரு பேராசிரியாரக நியமிக்கப் பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது.

மேலும், நீதா அம்பானிக்கு மட்டுமே இந்த முன்மொழிவு குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் முன்மொழிவுக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீதா அம்மானியை வருகைதரு பேராசிரியராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தர் ராகேஷ் பட்னாகரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதா அம்மானியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அளித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவர் கூறுகையில், தொழிலதிபரின் மனைவியாக இருப்பது ஒரு சாதனை அல்ல, இவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆளுமை கிடையாது. பெண்கள் அதிகாரம் பற்றி நீங்கள் பேசவேண்டுமென்றால், அருணிமா சின்ஹா, பச்சேந்திரி பால், மேரி கோம் போன்றோரை அழைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பிரசனை குறித்து, பேராசிரியர் குழுத் தலைவர் கௌஷல் கிஷோர் மிஸ்ரா, சமூக அக்கறை கொண்ட தொழிலதிபர்களை வருகைதரு பேராசிரியராக நியமிப்பது பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories