இந்தியா

விரிவாக்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: குறுக்கு வழியில் EIA2020-ஐ திணிக்கும் மோடி அரசு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள திட்ட விரிவாக்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விரிவாக்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: குறுக்கு வழியில் EIA2020-ஐ திணிக்கும் மோடி அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய திட்ட விரிவாக்கத்திற்கு மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவிக்கையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உற்பத்தி அதிகரிக்காத, புதிய சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத எரிவாயு குழாய் பதிப்பு, பெட்ரோ கெமிக்கல், சர்க்கரை ஆலை உள்ளிட்ட விரிவாக்கத் திட்டங்களுக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தின் விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய சட்ட விதியை வெளியிட்டுள்ளது.

விரிவாக்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: குறுக்கு வழியில் EIA2020-ஐ திணிக்கும் மோடி அரசு

அதன்படி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஆலையின் தொழில்நுட்பத்தையோ, அதன் மூலப்பொருளையோ அல்லது எரிபொருளையோ மாற்றி உற்பத்தியை விரிவாக்கம் செய்ய புதிய சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விலக்கானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை அமல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனிடையேதான் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு இந்த புதிய திருத்த விதிகளை மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் குறுக்கு வழியில் EIA 2020ஐ கொண்டு வர மத்திய அரசு செய்யும் சூழ்ச்சி இது எனவும் சாடியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories