இந்தியா

மோடி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. திஷா ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரேட்டா தன்பெர்க்!

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு, சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

மோடி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. திஷா ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரேட்டா தன்பெர்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது, வன்முறையைத் தூண்டிவிட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு, சக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த 22 வயது சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு கடந்த வாரம் கைது செய்தது. ஜனவரி 26 அன்று டெல்லியில் விவசாயிகள் அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர், போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றியும் விளக்கும் ‘டூல் கிட்’ ஒன்றை உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், திஷா ரவி கைது செய்யப்பட்டார்.

கிரேட்டா தன்பெர்க்கின் “ப்ரைடே’ஸ் பார் பியூச்சர்” (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் என்ற வகையில், திஷா ரவியின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும், திஷா ரவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், “ப்ரைடே’ஸ் பார்பியூச்சர்” அமைப்பை நிறுவியவரும், உலகின் இளம் சூழலியல் ஆர்வலருமான கிரேட்டா தன்பெர்க்கும், திஷா ரவிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

மோடி அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. திஷா ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிரேட்டா தன்பெர்க்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்” மத்திய பாஜக அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories