இந்தியா

“ஜெய்ஷாவுக்கு எப்படி பணம் வருகிறது? இதை சொல்லுங்கள்; பிறகு சவால் விடுங்கள்” - அமித்ஷா மீது மம்தா தாக்கு!

பி.சி.சி.ஐயின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு ஜெய்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஜெய்ஷாவுக்கு எப்படி பணம் வருகிறது? இதை சொல்லுங்கள்; பிறகு சவால் விடுங்கள்” - அமித்ஷா மீது மம்தா தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை, பா.ஜ.க குதிரைபேரம் பேசி விலைக்கு வாங்கி வருகிறது. எப்படியாவது மம்தா பானர்ஜியின் ஆட்சியை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கில் அவருக்குச் சவால் விட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "திரணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியில் ஊழல் செய்துள்ளனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்" என மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

“ஜெய்ஷாவுக்கு எப்படி பணம் வருகிறது? இதை சொல்லுங்கள்; பிறகு சவால் விடுங்கள்” - அமித்ஷா மீது மம்தா தாக்கு!

இதனைத் தொடர்ந்து, 24 பார்க்னாஸ் பூத் உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, " அமித்ஷா இங்கே வந்தார். சாகர் தீவுக்குச் சென்றார். கங்கா சாகர் பகுதியின் வளர்ச்சிக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்குச் சவால் விடுகிறார். நான் அவருக்குச் சவால் விடுகிறேன். அவர் முதலில் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக நிற்கட்டும். பிறகு, எனக்குச் சவால் விடட்டும்.

முதலில் அவருடைய மகனை ஜனநாயக ரீதியில் போட்டியிட வையுங்கள் என்று நான் அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். ஜெய்ஷாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? பி.சி.சி.ஐயின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னை அவதூறாகப் பேசலாம். ஆனால், என்னைப் புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories