இந்தியா

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வது ஏன்? : மோடி அரசுக்கு திருச்சி சிவா கேள்வி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கழக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

கச்சா எண்ணெய் விலை  குறைந்த போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வது ஏன்? : மோடி அரசுக்கு திருச்சி சிவா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கழக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

இது குறித்து 10.2.2021 அன்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுப்பிய கேள்வி வருமாறு:-

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பாரா? (அ) 2020-21ஆம் ஆண்டில் அரசுக்கு எந்த பல்வேறு விலைகளுக்கு கச்சா எண்ணெய் கிடைக்கப்பெற்றது?

(ஆ) கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்ததற்கான காரணங்களை காலாண்டு எண்ணெய் விலை விபரங்களோடு தெரிவிக்கவும். இவ்வாறு மாநிலங்களவைக் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

கச்சா எண்ணெய் விலை  குறைந்த போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வது ஏன்? : மோடி அரசுக்கு திருச்சி சிவா கேள்வி!

இந்த கேள்விக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு:-

(அ) மற்றும் (ஆ) 2021ஆம் ஆண்டு இந்திய கச்சா எண்ணெய்யின் சராசரி மாதாந்திர விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 - 19.90., மே 20 - 30.60., ஜூன் 20 - 40.63., ஜூலை 20 - 43.35., ஆக. 20 - 44.19., செப். 20 - 41.35., அக் 20 - 40.66., நவ. 20 - 43.34., டிச20 - 49.84., ஜன 21- 54.79., பிப். 21 (பிப்.2 வரை) 56.07 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 26.06.2010 முதல் மற்றும் 19.10.2014 முதல் சந்தை தீர்மானப்படி நிர்ணயிக்கப்படுகின்றன.

பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பற்றி ஆலோசனை செய்து உரிய முடிவுகள் எடுக்கின்றன. அவை விலையை உயர்த்துவது மட்டுமின்றி, சர்வதேச விலை மாற்றங்களுக்கு ஏற்ப குறைக்கவும் செய்கின்றன. இந்திய டாலர் பரிமாற்றத்தில் விலை ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் - டீசல் சில்லறை விலையை மறு அமைப்பு செய்கின்றன.

16.6.2017 முதல் இது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மிகவும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நுகர்வோருக்கு துணை புரிவதற்காகவும் இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories