இந்தியா

“ரமலான் திருநாளன்று சி.பி.எஸ்.இ தேர்வு நடத்துவது அழகல்ல” - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

“ரமலான் திருநாளன்று சி.பி.எஸ்.இ தேர்வு நடத்துவது அழகல்ல” - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் "ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது.

ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories