இந்தியா

“டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் டிராக்டர் பேரணி” : போராட்டத்தை ஒடுக்க அதிரடிப் படையினர் குவிப்பு !

டெல்லியின் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் டிராக்டர் பேரணி ஒத்திகை தொடங்கியது.

“டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் டிராக்டர் பேரணி” : போராட்டத்தை ஒடுக்க அதிரடிப் படையினர் குவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடும் குளிரில் விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 43 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு ஏற்க மறுத்ததால் 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு குறைந்த எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்று தொடர்ந்து திண்ணமாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே ஆளுநர் மாளிகை முற்றுகை, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை தொடங்கியுள்ளனர். முன்னதாக அறிவித்தபடி, வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி, 26-ம் தேதி போராட்டத்துக்கான ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கினர். டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முதலில் காசிபூர் எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கினர். நொய்டா வரை மட்டுமே சென்று காசிப்பூர் திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கம் நோக்கில் மத்திய அரசு அதிரடிப் படையினர் குவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories