இந்தியா

35வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. 6ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கூடி முடிவெடுக்கும் என சரத் பவார் கூறியுள்ளார்.

35வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. 6ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் 35வது நாளாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 25 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு இன்று (டிச.,30) பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகளுடன் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று கறாராகக் கூறியதால் பேச்சுவார்த்தை தடைபட்டது. அதனையடுத்து விவசாயிகளின் போராட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே விவசாய சங்கங்கள் வலியுறுத்திய படி மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும், மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும், சுற்றுச்சூழல் சட்டத்திலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று மாலை மீண்டும் மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வாலுக்கு விவசாய சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று மீண்டும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை காரணமாக டெல்லி எல்லைகளில் நடைபெற இருந்த டிராக்டர் பேரணி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவான பேரணி, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கூடி முடிவு செய்யும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories