இந்தியா

பொருளாதார வீழ்ச்சி: மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை; இறக்குமதியுமில்லை - வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழில்துறை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி: மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை; இறக்குமதியுமில்லை - வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின், இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ள்ள திருத்தப்பட்ட வர்த்தக தரவுகளி, “2020 நவம்பரில் ஏற்றுமதி 8.74 சதவிகிதமும், இறக்குமதி 13.3 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளன. வர்த்தகப் பற்றாக்குறையும் 9.9 பில்லியன் டாலராக உள்ளது.

பொருளாதார வீழ்ச்சி: மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை; இறக்குமதியுமில்லை - வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி - 59.7 சதவிகிதம், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி - 8.1 சதவிகிதம், கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதி - 8.1 சதவிகிதம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி - 1.2 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

மருந்துகள் ஏற்றுமதி, கற்கள் மற்றும் நகைகள், மின்னணு பொருட்கள், இரும்பு அல்லாத உலோகங்கள், ரசாயன பொருட்கள், மின்னணு பொருட்கள், உரங்கள், தங்கம் ஏற்றுமதி ஆகியன மட்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் இருந்து வருகின்றது. இது ஏற்றுமதிக்கு தொடர்ந்து தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

பொருளாதார வீழ்ச்சி: மோடி ஆட்சியில் ஏற்றுமதியுமில்லை; இறக்குமதியுமில்லை - வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

குறிப்பாக இந்தியாவில் ஏற்றுமதி விகிதம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக நவம்பரில் வீழ்ச்சிகண்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்றுமதி கண்டது. ஆனால், அதன்பிறகு, கடந்த அக்டோபர், நவம்பர் என தொடர்ந்து 2 மாதங்களாக ஏற்றுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவின் ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில் ஏற்றுமதி துறையில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், “ஏற்றுமதியின் சரிவால், வர்த்தக கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் அபாயம் உள்ளது.

மேலும், இவ்வாறு ஏற்றுமதி குறைவது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். எனவே இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையைச் சீரமைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories