இந்தியா

“பொய் செய்திகளை தடுக்காவிடில் வெளி ஏஜென்சியை நியமிக்க நேரிடும்” -மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

பொய் செய்திகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று மூன்று வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தவறான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் கொரோனா பரவியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள இரண்டு பதில்களிலும் தங்களுக்கு திருப்தி இல்லை என்று தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதுபோன்ற பொய்யான செய்திகளை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து மத்திய அரசின் பதிலில் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் கேபிள் டிவியை கட்டுப்படுத்துவதற்கு வெளி ஏஜென்சியை நியமிக்க உத்தரவிட வெண்டிவரும் என்று எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து புதிய பதிலை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் 3 வாரம் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories