இந்தியா

“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் !

ஜார்கண்ட் மாநிலத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச் சொல்லி கிருஸ்துவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடாததற்காக மதபோதகரை ரயிலில் இருந்து இந்துத்துவா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அந்த சம்பவம் முடிந்த 2 நாட்களில் மும்பை தானா பகுதியில் திவா என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தி அவரையும் அடித்து வன்முறையில் இந்துத்துவா கும்பல் ஈடுபட்டது.

பின்னர், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமில்லாமல், குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது.

“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் !

கடந்த 2019ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்தில் “ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச் சொல்லி கிருஸ்துவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 16ம் தேதி பயங்கர ஆயுதங்கள் மற்றும் தடியுடன், இந்துத்வா கும்பல் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தின் சிம்டேகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பெரிகுடர் என்ற கிராமத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் !

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், பழங்குடி கிறிஸ்தவரான தீபக் குலு (26) என்ற இளைஞரை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கிராமத்தில் உள்ளவர்களை சாதி ரீதியாக திட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, தாக்குதல் நடத்தியது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, “பசுக்களை கொலை செய்யும் வீடியோ ஒன்று எங்களுக்கு கிடைத்ததாகவும், அதனால் தான் அடிக்கிறோம்” என கூறி, வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளனர். ஆனால், அந்த வீடியோ போலியானது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தாக்குதலின் போது, தன்னையும் மற்ற ஆறு கிறிஸ்தவ பழங்குடியினரையும் கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாடோ டோலா என்ற கிராமத்திற்கு இழுத்துச் சென்ற ஒரு மரத்தின் கீழ் கட்டிவைத்து தாக்குதல் நடத்தினர்கள். அப்போது, “ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச் சொல்லி எங்கள் தலையை கும்பல் மொட்டையடித்ததாகவும் தீபக் குற்றம் சாட்டினார்.

“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் !

தீபக் மேலும் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் காவல் நிலைத்தில், நாங்கள் மாடுகளை கொன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்காக காவல்துறையினர் எங்களை கைது செய்து எங்கள் வீடுகளைத் தேடினார்கள்.

ஆனால் மாட்டு வதை பற்றிய எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பின்னர் எங்களை விடுதலை செய்தனர். என தீபக் தெரிவித்தார். இதனையடுத்து போலிஸார் விடுவித்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிம்டேகா காவல் நிலையத்தில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 4 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories