இந்தியா

விவசாயிகளை காப்பதற்காக அல்ல... அவர்களை விற்பதற்காக கொண்டுவரப்பட்டதே வேளாண் மசோதா : திருச்சி சிவா ஆவேசம்!

இந்தியா விவசாயிகளின் நாடு என்ற பெயர் போய், கார்பரேட் நிறுவங்களின் நாடு என்றாகிவிட்டது என வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவகைகளும் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்தன. மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த மசோதாக்கள் மூலம் சந்தைக்குச் செல்லும் விவசாய விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெரு வணிகர்களிடமும், கார்பரேட் நிறுவனங்களிடமும் சென்றுவிடும் என குற்றஞ்சாட்டினர்.

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும் என தி.மு.க. எம்.பி திருச்சி சிவா திருத்த தீர்மானத்தையும் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா ஆவேச உரையாற்றினார்.

விவசாயிகளை காப்பதற்காக அல்ல... அவர்களை விற்பதற்காக கொண்டுவரப்பட்டதே வேளாண் மசோதா : திருச்சி சிவா ஆவேசம்!

அப்போது அவர் பேசுகையில், “வேளாண் மசோதா விவசாயிகளை காப்பதற்காக கொண்டுவரப்பட்டது அல்ல.. அவர்களை விற்பதற்காக கொண்டுவரப்பட்டதாகும்.

கொரோனா காலத்தில் இந்த மசோதாக்களை கொண்டுவர வேண்டிய அவசரம் என்ன..? இந்த மசோதாக்களை கொண்டுவந்ததன் மூலம் இந்தியா விவசாயிகளின் நாடு என்ற பெயர் போய் கார்பரேட் நிறுவங்களின் நாடு என்றாகிவிட்டது.

ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போதெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களைக் நிறைவெற்றுவதைக் கைவிட்டு தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு மசோதாக்களை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விவசாயிகளை காப்பதற்காக அல்ல... அவர்களை விற்பதற்காக கொண்டுவரப்பட்டதே வேளாண் மசோதா : திருச்சி சிவா ஆவேசம்!

ஆயினும், வேளாண் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் திருச்சி சிவாவின் கோரிக்கை நிராகரிக்கபட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகளை கருத்திலேயே கொள்ளாமல், மத்திய பா.ஜ.க அரசு மாநிலங்களவையிலும் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு, முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், 12 கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தன்னிச்சையாக செயல்பட்டார் என்றும் இன்று அவை கண்ணியமாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories