இந்தியா

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?  என அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவன் - உ.பியில் பயங்கரம்!

தனக்கு பிறந்த 5 குழந்தைகளும் பெண்ணாக இருந்ததால் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், குற்றச் செயல்களுக்கும் கொடிகட்டி பறக்கும் மாநிலம் என்றால் உத்தர பிரதேசம் என அனைவரும் அறிவர்.

அவ்வகையில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என அறிவதற்கு தனது மனைவியின் வயிற்றை கணவனே கிழித்து பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

பதூன் என்ற பகுதியின் நெக்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த நபர்தான் பன்னலால். இவருக்கு ஏற்கெனவே 5 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இதனால் அதிருப்தி அடைந்த பன்னலால், 6வதாக பிறக்கப்போகும் குழந்தையாவது ஆணாக இருக்க வேண்டும் என ஆவலாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியின் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என அறிவதற்காக அவரின் வயிற்றை கூர்மையான கத்தியை கொண்டு பன்னலால் வெட்டியுள்ளார்.

இதனால், கடுமையான வலியால் துடித்த அந்த பெண்ணை உறவினர்கள் மீட்டு பரேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இதனையடுத்து பன்னலால் மீது வழக்குப்பதிவு செய்த சிட்டி சிவில் போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மூத்த காவல்துறை அதிகாரி ப்ரவீன் சிங் சவுகன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories