இந்தியா

சுற்றுச்சூழலை அடுத்து விவசாயத்தை பலி கொடுக்கும் பண்ணை சேவை மசோதா : மோடி அரசின் அடுத்த நாசகாரத்திட்டம்!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலை அடுத்து விவசாயத்தை பலி கொடுக்கும் பண்ணை சேவை மசோதா :  மோடி அரசின் அடுத்த நாசகாரத்திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

அந்த புதிய கல்விக் கொள்கையில் ஏழை மாணவர்களின் கல்வி கனவினைத் தகர்க்கும் வகையிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது.

சுற்றுச்சூழலை அடுத்து விவசாயத்தை பலி கொடுக்கும் பண்ணை சேவை மசோதா :  மோடி அரசின் அடுத்த நாசகாரத்திட்டம்!

கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தச் சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.

அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

சுற்றுச்சூழலை அடுத்து விவசாயத்தை பலி கொடுக்கும் பண்ணை சேவை மசோதா :  மோடி அரசின் அடுத்த நாசகாரத்திட்டம்!

இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. குறிப்பாக, விவசாயமும், சந்தைகளும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசே இந்த மசோதாக்களை கொண்டுவருவதாக எதிர்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மசோதாவைக் கொண்டுவந்த மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில், மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற விவாதத்தின் போது இந்த மூன்று மசோதாக்களை எதிர்த்து பேசிய இக்கட்சித் தலைவரும், எம்பி.யுமான சுக்பீர் சிங் பாதல், மசோதாக்களை கண்டித்து தங்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 அவசர சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க அரசின் அவசர சட்டங்கள் காரணமாக விளைபொருட்களை விலை குறைவாக விவசாயிகள் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories