இந்தியா

“கொரோனாவை ஒழிக்கிறோம் எனக்கூறி இந்தியாவை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க அரசு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மோடி அரசு மறைத்து வருகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொரோனாவை ஒழிக்கிறோம் எனக்கூறி இந்தியாவை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க அரசு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக திட்டமிட்டு செயல்படுகிறோம் எனக் கூறி கொண்டு இந்தியாவை மத்திய பா.ஜ.க. அரசு படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், திட்டமிடல்கள், செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதோடு, பாஜக அரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் வெளிப்படுத்தி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி.

அவ்வகையில், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிரான மத்திய பா.ஜ.க., அரசின் மோசமான செயல்பாடுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதமாக குறைந்துவிட்டதாக சாடியுள்ளார்.

“கொரோனாவை ஒழிக்கிறோம் எனக்கூறி இந்தியாவை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க அரசு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பதினைந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் கடன்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். உலகளவில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், ஊடகங்களும் இதனை மறைத்து வருகிறது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories