இந்தியா

“கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆண்டிஜென் சோதனைகளை விரைவுப்படுத்துக” - புது வழிகாட்டுதல்களை வெளியிட்டது ICMR

வெளி நாட்டில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் ஆனவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆண்டிஜென் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கட்டுப்பாட்டு பகுதிகளில்  ஆண்டிஜென் சோதனைகளை விரைவுப்படுத்துக” - புது வழிகாட்டுதல்களை வெளியிட்டது ICMR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயாம் கொரொனா சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான ஒரு ஆலோசனையை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது. அதில், “நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆண்டிஜென் சோதனைகளை அனைவருக்கும் மேற்கொள்வது அவசியம். பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளின் போது கொரோனா சோதனை செய்யவில்லை என்பதற்காக தாமதிக்கக் கூடாது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்க்கான அறிகுறியுள்ள, இணை நோய் தாக்கம் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பது அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதார, களப்பணியாளர்களுக்கு அறிகுறிகள் இருப்பின் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்

“கட்டுப்பாட்டு பகுதிகளில்  ஆண்டிஜென் சோதனைகளை விரைவுப்படுத்துக” - புது வழிகாட்டுதல்களை வெளியிட்டது ICMR

நோய் எதிர்ப்புத் திறன் இல்லாத, இணை நோயாளர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானால் அவர்களுக்கு 5 மற்றும் 10ம் நாள் கட்டாயம் மீண்டும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும். முதலில் அதிவிரைவு ஆண்டிஜென் சோதனையும் பிறகு ஆர்டி பிசிஆர், ட்ரூநாட் அல்லது சிபிநாட் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படும் போது ஒவ்வொரு முறையும் மார்பகங்களை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை கையாளும் பொது அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வெளிநாட்டில் இருந்து திரும்பி 14 நாட்கள் ஆனவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ரேபிட் ஆண்டிஜென் சோதனைகள் அவசியம் எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையம் வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு நான்கு மணி நேரத்தில் சோதனை முடிவுகள் வழங்கப்படும். அதுவரை பயணிகள் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வரும் வரை அருகாமையில் உள்ள ஓட்டல்களில் பயணிகள் தாங்கிக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நடைமுறைகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை வட்டார தகவல்கள் கூறுகின்றது.

banner

Related Stories

Related Stories