இந்தியா

“கடன் வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிடிவாதம்!

வங்கிக்கடன் மீதான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“கடன் வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிடிவாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

இதனால், வங்கிகள், நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை வசூலிப்பதை மே மாதம் வரை நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. பின்னர் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும், ஆறு மாத கால தவணைகளும், கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், தவணை நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டி கணக்கிடப்பட்டு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் எனவும் வங்கிகள் அறிவித்தன.

நிறுத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கடன் தவணைக்குரிய வட்டிக்கும் சேர்த்து, வட்டி வசூலித்தால் அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர நிவாரணமாக அமையாது எனக் கூறி ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா உள்ளிட்ட பலர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“கடன் வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிடிவாதம்!

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த தவறியவர்கள் மீது இரண்டு மாதங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே வங்கிகள் செப்டம்பர் மாதத்துக்கான தவணையை வசூலிக்கத் தொடங்கிவிட்டன. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின் வங்கி கடன் அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் செப்டம்பர் மாதக் கடன் தவணையை திரும்பச் செலுத்த வேண்டும் என குறுந்தகவல், இ- மெயில் தகவல்களை அனுப்பிவருகின்றன.

banner

Related Stories

Related Stories