இந்தியா

பா.ஜ.க அரசின் 'கர்மயோகி' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - சந்தேகம் கிளப்பும் பொதுமக்கள்!

‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பா.ஜ.க அரசின் 'கர்மயோகி' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - சந்தேகம் கிளப்பும் பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் எனும் பெயரில் ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காகவும், கர்மயோகி இயக்கம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசு ஊழியர் திறன் வளர்த்தல் திட்டங்களுக்கு பிரதமர் தலைமையிலான பொது மனிதவள மேம்பாட்டுக் குழு ஒப்புதலளித்து கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி, “வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும், புதுமைகளை புகுத்துபவர்களாகவும் ஆக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில், இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் கிடக்கும் இந்தச் சூழலில் இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும், ‘கர்மயோகி இயக்கம்’ எனும் பெயரில் அரசு ஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்யும் முயற்சியை பா.ஜ.க அரசு மேற்கொள்ள இருக்கிறதா என்றும் சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories