இந்தியா

"கொரோனாவை காரணம் காட்டி எம்.பி-க்களின் கேள்வி நேரத்தை குறைக்க பா.ஜ.க திட்டம்?” : காங்கிரஸ் எதிர்ப்பு!

எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தை குறைத்துவிடக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

"கொரோனாவை காரணம் காட்டி எம்.பி-க்களின் கேள்வி நேரத்தை குறைக்க பா.ஜ.க திட்டம்?” : காங்கிரஸ் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தை குறைத்துவிடக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், எம்.பிக்கள் கேள்வி எழுப்புவதற்கான நேரத்தைக் குறைக்க திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தை குறைத்துவிடக்கூடாது என வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கொரோனா காலத்தைக் காரணம் காட்டி, எம்.பி.க்கள் தாக்கல் செய்துள்ள நோட்டீஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தைக் குறைத்து, கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தைக் குறைக்கும் திட்டம் இருப்பதாக அறிகிறோம்.

"கொரோனாவை காரணம் காட்டி எம்.பி-க்களின் கேள்வி நேரத்தை குறைக்க பா.ஜ.க திட்டம்?” : காங்கிரஸ் எதிர்ப்பு!

நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொதுநலன் சார்ந்த முக்கிய விஷயங்களில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் கேள்வி எழுப்பிப் பேசுவது, எம்.பி.க்களுக்கு கிடைக்கக் கூடிய நடைமுறையில் மிகவும் முக்கியமானவை.

இந்தச் சூழலில் கேள்வி நேரத்தையும், கேள்விக்குப் பிந்தைய நேரத்தையும் குறைத்து, எடுத்துப் பேசக்கூடிய விவகாரங்கள் எண்ணிக்கையையும் குறைத்து, நேரக்கெடு வைப்பது என்பது எம்.பி.க்களின் நலனுக்கானது அல்ல.

மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எந்தவிதமான நேரக்குறைப்பும் இன்றி, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிப் பிரச்சினை, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பிப் பேசுவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமான கூட்டத்தொடரில் என்ன நடைமுறை இருக்குமோ அதை அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories