இந்தியா

“தி.மு.க-வின் சாதனை மகுடத்தில் ஜொலிக்கும் சமூகநீதி முத்து": உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!

அருந்ததியருக்குத் தனி ஒதுக்கீட்டை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில், மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“தி.மு.க-வின் சாதனை மகுடத்தில் ஜொலிக்கும் சமூகநீதி முத்து": உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அருந்ததியருக்குத் தனி ஒதுக்கீட்டை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு - திராவிட இயக்க மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட முத்து என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

"தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கென செய்யப்பட்ட உள்ஒதுக்கீடு (தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம்) தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (27.8.2020) காலை அளித்துள்ள தீர்ப்பில், இதுபற்றி அந்தந்த மாநிலங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்; இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கும்போது, அதன் பயன்களை நீட்டிக்கும் வகையில், உள்ஒதுக்கீடு செய்யும் உரிமையும் மாநிலங்களுக்கு உண்டு என்று அளித்துள்ள தீர்ப்பை வெகுவாக வரவேற்கிறோம்.

(இதேபோன்றதொரு வழக்கில் (இ.வி.சின்னய்யா (எ) ஆந்திர மாநில அரசு) தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று 2004 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இன்று வந்துள்ள தீர்ப்பு மாறுபட்டதாகும். இரண்டு அமர்வுகளும் சம அளவிலான நீதிபதிகளை (5 நீதிபதிகள்) கொண்டிருப்பதாலும், மாறுபட்ட தீர்ப்புகள் வந்திருப்பதாலும், மேலும் தெளிவுக்காக இவ்வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் செய்துள்ளனர்).

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு இன்று அளித்துள்ள தீர்ப்பின்படி, கலைஞர் ஆட்சியில் தரப்பட்ட அருந்ததியர் தனி இடஒதுக்கீடு (3 சதவிகிதம்) செல்லும் என்பது உறுதியாகிவிட்டது.

அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு பற்றி முதலமைச்சர் கலைஞர் தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தவர்தான் இந்த வழக்குப் போட்ட டாக்டர் கிருஷ்ணசாமி (2009).

“தி.மு.க-வின் சாதனை மகுடத்தில் ஜொலிக்கும் சமூகநீதி முத்து": உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!

திராவிட இயக்க சாதனை மகுடத்தில் ஒரு முத்து!

கலைஞரின், தி.மு.க.வின், திராவிடர் இயக்கத்தின் சரித்திரச் சாதனை மகுடத்தில் ஜொலிக்கும் சமூகநீதி முத்து இது!

திராவிடர் இயக்கம், எஸ்.சி., எஸ்.டி.,க்கு என்ன செய்தது என்று உளறும் கபோதிகளுக்கு இது பலத்த அடி கொடுத்த பாடமாகும்.

இன்று காலை செய்தியாளர்கள் சிலர், தீர்ப்புக்குப்பின் நம்மை நேரில் சந்தித்து எடுத்த பேட்டியில் சொன்னோம்,

இத்தீர்ப்பினை வரவேற்பதோடு, இது திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி. தாழ்த்தப்பட்டவர்களில் மூன்றாவது அடுக்கில் வைக்கப்பட்ட அருந்ததிய சகோதர, சகோதரிகளுக்குக் கிடைத்த கல்வி, உத்தியோக வாய்ப்பிற்கான புது வாழ்வு - மறுமலர்ச்சியை உண்டாக்கும்.

ஏற்கெனவே, இதனால் பல டாக்டர்கள், என்ஜினியர்கள் அந்த சமூகத்தில் வந்துள்ளார்கள் என்பதை தோழர் இரா.அதியமான் போன்ற தலைவர்கள் பல மேடைகளில் பதிவு செய்ததோடு கலைஞருக்கு, திராவிடர் இயக்கத்திற்கு நன்றியும் கூறியுள்ளனர்.

அந்தந்த மாநிலங்களுக்கே இருக்கவேண்டும்.

இத்தீர்ப்பின்மூலம் கிடைத்த மற்றொரு முக்கிய தத்துவ வெற்றி என்னவென்றால், சமூகநீதி - இட ஒதுக்கீடுபற்றி முடிவு செய்யும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே இருக்கவேண்டும் என்று திராவிடர் இயக்கம் வற்புறுத்திய கொள்கை நிலைப்பாடு - தத்துவம், உச்சநீதிமன்றத்தால் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதேயாகும்!

எனவே, திராவிடர் இயக்கங்கள் பெற்ற இரட்டை வெற்றி இது!

திராவிடர் கழகம் பிறந்த இந்நாளில் (1944) நமக்குக் கிடைத்திருக்கின்ற இனிய வெற்றிச் செய்தி இது!

இனிமேலாவது ‘‘விபீஷணர்கள்’’ திருந்தினால் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories