இந்தியா

“நீங்கள் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா?” : தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்தால் கொந்தளித்த தெலங்கானா எம்.எல்.ஏ!

ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனின் இந்த கருத்தைப் பார்க்கும் போது, அவர் இம்மாநிலத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ சைதி ரெட்டி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா?” : தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்தால் கொந்தளித்த தெலங்கானா எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் மாநிலங்களில் தெலங்கானாவும் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பற்றி அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சனம் செய்தது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக இருந்தவரை மோடி அரசு ஆளுநர நிமியத்து, பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“நீங்கள் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா?” : தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்தால் கொந்தளித்த தெலங்கானா எம்.எல்.ஏ!

இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தர்ராஜன், மாநிலத்தில் கொரோனா சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை; அரசு சோதனைக்களை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனின் இந்த கருத்துக்கு ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ சைதி ரெட்டி என்பவர் விமர்சித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “பிற மாநிலங்களைவிட, ஏன் நாட்டிலேயே தெலங்கானாவில் மட்டும்தான் கிராமங்களில் கூட அதிகளவில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கொண்டுவந்த திட்டத்தை பிற மாநிலங்களும் கூட பின்பற்றுகின்றனர். ஆனால், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனின் இந்த கருத்தைப் பார்க்கும் போது, அவர் இம்மாநிலத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

“நீங்கள் ஆளுநரா அல்லது பா.ஜ.க தலைவரா?” : தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்தால் கொந்தளித்த தெலங்கானா எம்.எல்.ஏ!

ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மற்றும் கட்சி தலைமையின் அறிவுத்தலின் படி எம்.எல்.ஏ சைதி ரெட்டி தனது பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories