இந்தியா

செப்டம்பர் 1 முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்படுமா? - ஆலோசித்துவரும் மத்திய அரசு!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில், ஷிப்ட் முறையில் பள்ளிகளைச் செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்படுமா? - ஆலோசித்துவரும் மத்திய அரசு!
PC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

படிப்படியாகப் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மார்ச் 23-ம் தேதியிலிருந்து எந்த செயல்பாடுகளும் இல்லாமல் இவை முடங்கிக் கிடக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி மற்றும் நவம்பர் 14-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களும் படிப்படியாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடிக்கிடந்தாலும் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறுவது என்பது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குச் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் அடங்கிய குழு அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகத் தெரிகிறது. மற்ற உத்தரவுகளைப் போலவே இதிலும் இறுதிக்கட்ட முடிவு அந்தந்த மாநில அரசுகளே எடுக்கவேண்டும்.

செப்டம்பர் 1 முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்படுமா? - ஆலோசித்துவரும் மத்திய அரசு!

பள்ளி கல்லூரிகளை மீண்டும் திறக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் மட்டும் என்னென்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்து வெளியிடும். பின்பு இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கவேண்டும்.

முதல் 15 நாட்களுக்கு 10 -ம் வகுப்பு முதல் 12 –ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஒரு வகுப்பில் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களும் ஒரே நாளில் பள்ளிக்கு வரமாட்டார்கள்.

இதுவரை 6-ம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கு வர வைக்கும் எந்த எண்ணமும் இல்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளிலேயே பாடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பள்ளிகளின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு மிக முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு என்ன மாதிரியான திட்டத்தை மோடியின் மத்திய அரசு கொண்டுவரும் என தெரியாத நிலையே மக்கள் மத்தியில் உள்ளது.

banner

Related Stories

Related Stories