இந்தியா

“விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது” : வேடிக்கை பார்க்கிறதா மோடி அரசு?

இந்தியாவில் கொரோனாவால் நாள் தோரும் 50 ஆயிரத்துக்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

“விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது” : வேடிக்கை பார்க்கிறதா மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 18,976,340 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 711,220 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,973,568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 161,601 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளன நிலையில், இந்தியாவில் இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 40,739 ஆக அதிகரித்துள்ளது.

modi
modi
google

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,963,239 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 13,28,336 ஆக அதிகரித்துள்ளனர். நாள் தோரும் 50 ஆயிரத்துக்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 13 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

இதனிடையே கொரோனா சோதனை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 6,64,949 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது வரை 2,21,49,351 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories