இந்தியா

“பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கன்னியாகுமரி குழித்துறை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, அண்மைக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

சமீபத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தை சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திராவிட இயக்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தற்போது, கன்னியாகுமரி குழித்துறை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியும், குப்பைகளையும் மர்ம நபர்கள் வீசிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர், பேரறிஞர் அண்ணா சிலையின் பீடத்தில் காவி கொடியை கட்டியதோடு, சில உபயோகம் அற்ற பொருட்களை வீசி சென்று உள்ளனர்.

இன்று காலை இதை பார்த்த பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே, களியக்காவிளை போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவற்றை அகற்றினர். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து உள்ளது. அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்!

தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories