இந்தியா

CBSE வினாத்தாளில் சாதிய பாகுபாட்டை தூண்டும் கேள்வி: “பிஞ்சுகள் மனதில் விஷமேற்றுவதா?”-கொதிக்கும் பெற்றோர்!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தலித் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கேட்கப்பட கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CBSE வினாத்தாளில் சாதிய பாகுபாட்டை தூண்டும் கேள்வி: “பிஞ்சுகள் மனதில் விஷமேற்றுவதா?”-கொதிக்கும் பெற்றோர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்துத்வா கொள்கையினை மட்டும் பாடத்திட்டத்தில் புகுத்த நினைக்கும் சி.பி.எஸ்.இ தனது வழக்கமான போக்கை இந்த ஆன்லைன் வகுப்பிலும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு 30% பாடங்களை குறைக்கப்போவதாக கூறி, 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் “ஜனநாயகம், பன்முகத்தன்மை” போன்ற முக்கியப் பாடப் பிரிவுகளும், 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் “கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை” ஆகிய பாடப் பிரிவுகளையும் முழுமையாக நீக்கி தனது காவிபயங்கரவாத அரசியல் நிரலை கல்வியில் நிகழ்த்தியுள்ளது.

CBSE வினாத்தாளில் சாதிய பாகுபாட்டை தூண்டும் கேள்வி: “பிஞ்சுகள் மனதில் விஷமேற்றுவதா?”-கொதிக்கும் பெற்றோர்!

அதேபோல் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் "மங்கையராய்ப் பிறப்பதற்கே'' எனும் பாடமும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைக்கு மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் வேளையில், மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு சர்ச்சையில் சி.பி.எஸ்.இ சிக்கியுள்ளது.

நேற்றைய தினம் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், “தலித் குடியிருப்பு தயாரிப்பதில் என்ன வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது?” என கேட்கப்பட்டு, அதற்கு செங்கற்கள், ப்ளாஸ்டெரிங்(சிமெண்ட்) மண் மற்றும் வைக்கோல் என தெரிவு செய்வதற்கான விடைகளும் கொடுக்கப்படுள்ளன.

CBSE வினாத்தாளில் சாதிய பாகுபாட்டை தூண்டும் கேள்வி: “பிஞ்சுகள் மனதில் விஷமேற்றுவதா?”-கொதிக்கும் பெற்றோர்!

இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் ஒருவர் இதுதொடர்பாக பள்ளி ஆசிரியரிடம் கேட்டபோது இது பொருளாதார பாடத்தின் ஒரு பகுதியில் வருவதாகவும் அதில் இருந்துதான் வினாத்தாள் தயாரித்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் கூறியதுபோல பாடப்புத்தகத்தில் இருந்துள்ளது.

இதனையடுத்து மாணவியின் தாய் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “பாடத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைப் பற்றி தாழ்த்தி இதுபோல உள்ள ஒருபகுதியில் இருந்து கேள்வியை எடுக்காமல் ஆசிரியராவது தவிர்த்து இருக்கலாம். மாணவர்கள் தற்செயலாகக் கூட சாதியை மறந்துவிடக் கூடாது என்பதற்காக இதுபோல செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

இதுபோக, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக, அவர்களை களங்கப்படுத்தும் நோக்கில் அமைந்த பாடங்களை நீக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பலரும் சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இந்த மோசமான செயலைக் கண்டித்தும், பாடத்திட்டத்தில் இருந்து அந்தப் பகுதியை நீக்க வலியுறுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories