இந்தியா

“தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு!

சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டியவர் இந்திய பிரதமர் தற்போது ஓடி ஒளிந்து கொள்வது வேதனையாக உள்ளது என கரூரில் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

“தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய - சீனா எல்லையில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 1 மணி நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, “சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்கவேண்டியவர் இந்திய பிரதமர் தற்போது ஓடி ஒளிந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் எங்கே? என தேடி கண்டுபிடித்த வெளியே கொண்டுவரும் நிலைக்கு மோடி இருப்பது வேதனையளிக்கிறது. தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை.

இந்திய நட்பு நாடான நேபாளம் இந்திய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகள் என அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த அளவு மோசமான நிலைக்கு நாட்டை தள்ளி விட்டார். எதிர் நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சி நிற்கின்ற பிரதமரை நாடு கண்டதில்லை. இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories