இந்தியா

“தவறான பந்தயத்தில் இந்தியா வென்று வருகிறது" - பா.ஜ.க அரசை சாடும் ராகுல் காந்தி!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. நாள்தோறும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4- ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது இந்தியா.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “தவறான பந்தயத்தில் இந்தியா வென்று வருகிறது. ஆணவம் மற்றும் திறமையின்மையின் கலவையின் விளைவால் ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு இது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளதைச் சுட்டிகாட்டும் வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories