இந்தியா

“2 கி.மீ தூரம் பரவிய எண்ணெய் : அசாமை அதிரச் செய்த தீ விபத்து” - சுற்றுச்சூழல் மீதான அக்கறை காணாமல் போனதா?

அசாம் மாநிலத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“2 கி.மீ தூரம் பரவிய எண்ணெய் : அசாமை அதிரச் செய்த தீ விபத்து” - சுற்றுச்சூழல் மீதான அக்கறை காணாமல் போனதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அசாம் மாநிலம் டின்சுகியா என்ற வனப்பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறு உள்ளது. இந்த எண்ணெய் கிணற்றிற்குச் செல்லும் குழாயில் கடந்த சில நாள்களாக அதிகளவில் கசிவு இருந்துள்ளது.

எண்ணெய் நிறுவனத்தின் அலட்சியத்தால் கடந்த 14 நாட்களாக எண்ணெய்க் கசிவு தொடர்ந்து வந்த கிணற்றில் திடீரென நேற்று முன் தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் எழுந்த புகையினால் 10 கீ.மீ தூரத்திற்கு அப்பால் வரை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான திப்ரு-சைகோவா தேசியப் பூங்கா அருகேயுள்ள பஹ்ஜனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதாவது இதனால் சுமார் 1.5 கி.மீ பரப்பளவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“2 கி.மீ தூரம் பரவிய எண்ணெய் : அசாமை அதிரச் செய்த தீ விபத்து” - சுற்றுச்சூழல் மீதான அக்கறை காணாமல் போனதா?

கசிவு தொடர்வதால் தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.ஐ.எல். நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் இருவர் தீப்பிடித்த இடத்தின் அருகில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

அசாம் வனத்துறையின் ட்ரோன்கள் மூலம் இருவரது உடல்கள் இருக்கும் இடமும் அடையாளம் காணப்பட்டு இருவரது உடலையும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மேலும் அசாம் தீயணைப்புத் துறையினர், தேசியப் பேரிடர் மீட்புக் குழு, இந்திய விமானப்படை மற்றும் இராணுவ வீரர்கள் என பலரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

மேலும் தீ பாதிப்பு அதிகரிப்பதால் சிங்கப்பூரிலிருந்து பேரழிவு தடுப்பு நிபுணர்கள் குழு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது தீ பாதிப்புகளை கட்டுப்படுத்த இன்னும் மூன்று வாரம் ஆகும் எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

“2 கி.மீ தூரம் பரவிய எண்ணெய் : அசாமை அதிரச் செய்த தீ விபத்து” - சுற்றுச்சூழல் மீதான அக்கறை காணாமல் போனதா?

மேலும், வயல்களில் கச்சா எண்ணெய் படிந்திருப்பதால் அதனை அகற்ற கால தாமதம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அசாமில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories