இந்தியா

கொரோனாவின் ஆயுளை கணித்த குஜராத் ஜோதிடர் பேஜன் தருவாலா வைரஸ் பாதிப்பால் மரணம்! #CovidCrisis

பேஜன் தருவாலா என்ற பிரபல ஜோதிடர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் ஆயுளை கணித்த குஜராத் ஜோதிடர் பேஜன் தருவாலா வைரஸ் பாதிப்பால் மரணம்! #CovidCrisis
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நேரத்தில், மே 21ம் தேதிக்கு பிறகு நாட்டில் கொரோனா பரவல் இருக்காது என குஜராத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான பேஜன் தருவாலா கூறியிருந்தார். மேலும், அடுத்த ஆண்டு இந்தியா ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து உலக நாடுகளுக்கே சூப்பர் பவராக திகழும் என்றும் பேஜன் கூறியிருந்தார்.

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வருவாய் என கணித்துக் கூறியிருந்ததால் பேஜன் தருவாலாவின் கணிப்பில் பாஜகவினர் மற்றும் வலதுசாரி அமைப்பினர் பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தனர். விளைவு அவருக்கே கொரோனா தொற்றும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அகமதாபாத் நகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து 89 வயதான பேஜன் தருவாலா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கொரோனாவின் ஆயுளை கணித்த குஜராத் ஜோதிடர் பேஜன் தருவாலா வைரஸ் பாதிப்பால் மரணம்! #CovidCrisis

ஆகவே அவர் கொரோனா தாக்கியதால்தான் உயிரிழந்திருக்கிறார் என பேசப்பட்டது. ஆனால், பேஜன் தருவாலாவின் உறவினர்களோ அவரது உயிரிழப்புக்கு நிமோனியா மற்றும் மூளை பாதிப்பான ஹைபோக்ஸியா எனும் நோய்தான் காரணம். கொரோனாவால் அவர் உயிரிழக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.

பேஜன் தருவாலாவின் கூற்றுப்படி, மே 21க்கு பிறகு கொரோனா இந்தியாவை விட்டு ஒழியாமல் 2 லட்சம் பாதிப்பை நெருங்கி உலக அளவில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. எனவே, வைரஸ் பரவலை தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்தை தவிர மற்ற எந்த ஜோதிடத்தாலும் கட்டுப்படுத்தவோ விரட்டவோ முடியாது என்பதற்கு இதுவே உதாரணம் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories