இந்தியா

“வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது போலிஸார் கொடூர தாக்குதல்” - 2 ஏ.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்!

மொஹாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பஞ்சாப் போலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது போலிஸார் கொடூர தாக்குதல்” - 2 ஏ.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மொஹாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பஞ்சாபை சேர்ந்த இரண்டு போலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருத்வாரா ஒன்றில் இரு குழுக்களின் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ‘Rozana Pehredar'எனும் செய்தித்தாள் பத்திரிகையாளரான மேஜர் சிங் பஞ்சாபி (52), கடந்த வெள்ளிக்கிழமையன்று மொஹாலி காவல் அதிகாரிகளால் (ஏ.எஸ்.ஐ) கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

காயமடைந்த பத்திரிகையாளரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதால், தாக்குதலுக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவல்துறை ஏ.எஸ்.ஐ ஓம் பிரகாஷ், அமர்நாத் ஆகிய இரு அதிகாரிகளும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள பத்திரிகையாளர் மேஜர் சிங், “குருத்வாராவின் ஒரு அறையிலிருந்து ஒருவரை இரு போலிஸார் பிடித்து வருவதைப் பார்த்து அதை என் மொபைல் கேமராவில் படம் பிடித்தேன். இதையடுத்து ஏ.எஸ்.ஐ ஓம் பிரகாஷ் என்னை ஒரு கம்பால் அடிக்க ஆரம்பித்தார்.

“வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது போலிஸார் கொடூர தாக்குதல்” - 2 ஏ.எஸ்.ஐ.,கள் சஸ்பெண்ட்!

ஏ.எஸ்.ஐ ஓம் பிரகாஷ், ஏ.எஸ்.ஐ அமர்நாத் ஆகியோர் என்னை லாக்கப்பிற்கு இழுத்துச் சென்றனர். அங்கு நான் சித்திரவதை செய்யப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். அவர்கள் என் தலைப்பாகையையும் தள்ளிவிட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல், ஒரு பத்திரிகையாளரே பாதுகாப்பாக இல்லாவிட்டால், சாமானியர்களின் அவலநிலையை கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தீவிரமடைந்ததையடுத்து துணை ஆணையர் கிரிஷ் தயாலன், எஸ்.டி.எம் ஜகதீப் சேகலிடம் சுயாதீன மாஜிஸ்திரேட் விசாரணையை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும், மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories