இந்தியா

“ஊரடங்கை மீறி இறந்த பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல்” : உ.பியில் தொடரும் அராஜகம்!

ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த பசு-வுக்குப் பாடை கட்டி ஊர்வலம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

“ஊரடங்கை மீறி இறந்த பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல்” : உ.பியில் தொடரும் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர்.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுக்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஜெயராம் ஊரடங்கு உத்தரவை மீறி தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனையடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததன் விளைவு கொரோனா தொற்றும் மேலும் மேலும் அதிரித்து வருகிறது. இந்நிலையில் பசியால் இறந்த பசுவை நல்லடக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகிலுள்ள மெம்தி என்ற கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் ஒரு பசு சுற்றி திரிந்துள்ளது. பசுவின் உரிமையாளர் யார் என தெரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களிடம் உணவு இருந்தபோது பசுவுக்கு உணவு அளித்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் மனிதர்களுக்கே உணவு கிடைக்காத நிலையில், கடைவீதியில் பசியால் சுற்றித் திரிந்த பசு, திடீரென இறந்து விட்டது. பசு இறந்ததால் நமது ஊருக்கு பஞ்சம் வரும் என கிளப்பிவிடப்பட்ட வதந்தியால் பசுவை நல்லடக்கம்’ செய்ய முடிவு செய்து, பசுவின் உடலை, ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

“ஊரடங்கை மீறி இறந்த பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல்” : உ.பியில் தொடரும் அராஜகம்!

இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த இந்துத்வா கும்பல் ஒன்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்து மக்களை வரவழைத்ததாக குற்றச்சாட்டப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனையடுத்து ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் இறந்தாலே 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பசு-வுக்குப் பாடை கட்டி ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக 150 பேர்மீது அலிகார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்னால் மெம்தி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories