இந்தியா

“கிணற்றில் மிதந்த 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலம்”- ஊரடங்கால் வேலையின்றி தற்கொலை?: தெலங்கானாவில் சோகம்!

தெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தெலங்கானாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில், கோரே குந்தா என்ற கிராமத்தில் உள்ள பேக் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில் நேற்று இரவு சிலர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியானது.

தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.

“கிணற்றில் மிதந்த 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலம்”- ஊரடங்கால் வேலையின்றி தற்கொலை?: தெலங்கானாவில் சோகம்!

இந்த நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை மீட்கப்பட்ட 9 பேரில், 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்களில் எந்த காயமும் இல்லை என்றும் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகொறது. கீசுகொண்டா போலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories