இந்தியா

இலவச மின்சாரம் ரத்து: நாட்டின் வளர்ச்சிக்கும், ஊழவர்களின் வாழ்வாதாரத்துக்குமே சீர்க்குலைவு - காங்., சாடல்

எதிர்க்கட்சிகள் உதவி செய்வதை ஆளும் அரசுகள் மனமுவந்து ஏற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலவச மின்சாரம் ரத்து: நாட்டின் வளர்ச்சிக்கும், ஊழவர்களின் வாழ்வாதாரத்துக்குமே சீர்க்குலைவு - காங்., சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ்காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜான்சிராணி, மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.எஸ் அழகிரி, “பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பாதாக கூரும் பா.ஜ.க அரசு, அதில் இருந்து வறுமையில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் மட்டுமே வழங்குவதாகவும், தவறான பொருளாதார காரணங்களால் காங்கிரஸ் வளர்ச்சியை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இலவச மின்சாரம் ரத்து: நாட்டின் வளர்ச்சிக்கும், ஊழவர்களின் வாழ்வாதாரத்துக்குமே சீர்க்குலைவு - காங்., சாடல்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாய பசுமை திட்டம், இலவச மின்சாரம் போன்ற திட்டத்தின் மூலம் விவசாயத்தில் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி பயனித்ததாகவும், ஆனால் தற்போது இலவச மின்சாரத்தையும் பா.ஜ.க ரத்து செய்ய முயல்வது விவசாயிகளின் வாழ்வாதாரதத்தை சீர்குலைக்கும் செயலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது வருத்தம் அளிப்பதாகவும், ஆளும் காட்சிகள் எதிர்கட்சிகள் உதவி செய்வதை மனமுவந்து ஏற்று கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories