இந்தியா

“அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தடுக்கிறார் கிரண்பேடி” : நாராயணசாமி குற்றசாட்டு!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தடுக்கின்றார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

“அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தடுக்கிறார் கிரண்பேடி” : நாராயணசாமி குற்றசாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிரித்துவருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலையீடு கொரோனா தடுப்பு பணிகளை தாமத்தப்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தடுக்கின்றார் என முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,

“புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் வரியை கட்டிவிட்டுதான் வாங்கி செல்கின்றனர். இந்த சூழலில், புகார் கொடுத்த மதுக்கடை உரிமையாளர் மீதே வழக்கு போடுவது தவறு. இது காவல்துறையினரின் அதிகார துஷ்ப்பிரயோகத்தைக் காட்டுகிறது.

“அரசுக்கு வருகின்ற வருமானத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து தடுக்கிறார் கிரண்பேடி” : நாராயணசாமி குற்றசாட்டு!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டு, வழக்கு பதிவு செய்து வருகின்றார். இதனால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உரிமத்தை, ஆதரமற்ற குற்றசாட்டை வைத்து பறிப்பது அதிகார துஷபிரயோகம். துணை நிலை ஆளுநர் காலால் துறை சார்பில் தேவையில்லாமல் மது கடைகள் உரிமத்தை ரத்து செய்தது குறித்து தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இன்று மத்திய அரசானது மின்சாரம் குறித்து ஒரு உத்தரவை கொண்டு வருகின்றார்கள். இங்கு மின்சாரம் விவசாயிகள், ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கின்றோம். இதனை மத்திய அரசு தடுக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் மின்சாரத் சட்டத்திருத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்றும் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்” எனத் தெரிவித்தார் .

banner

Related Stories

Related Stories