இந்தியா

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ : மக்களை முட்டாளாக்கும் யோகா சாமியார்!

யோகா செய்தால் கொரோனாவே வராது என இந்துத்துவ ஆதரவாளர்களும், சில யோக சாமியார்களும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ : மக்களை முட்டாளாக்கும் யோகா சாமியார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தன் கோரமுகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, மாட்டு கோமியம் குடித்தால், கொரோனா குணமாகிவிடும். அனைவரும் சேர்ந்து கைதட்டி, விளக்கேற்றினால் கொரோனா ஒழிந்துவிடும் மற்றும் யோக செய்தால் கொரோனாவே வராது என இந்துத்துவ ஆதரவாளர்களும், சில யோகா சாமியார்களும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையே கதி எனக் கிடந்த சாமியார்கள் பலர் இன்னும் அதனை உணராமல் இந்த யோகா செய்து எண்ணெயை மூக்கில் ஊற்றினால் உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் அண்டாது என இந்த கொரோனா வைரஸை பயன்படுத்தி லாபம் பார்க்கவும் சிலர் திட்டமிட்டு வருகின்றனர்.

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ : மக்களை முட்டாளாக்கும் யோகா சாமியார்!

அந்த வகையில் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”யாராவது ஒரு நிமிடம் மூச்சு விட முடியுமானால், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என அர்த்தம்.

இது தவிர, உங்கள் நாசி வழியாக கடுகு எண்ணெயை வைத்தால், உங்கள் வயிற்றில் பாய்ந்து அங்குள்ள அமிலங்கள் காரணமாக கொரோனா வைரஸ் இறந்துவிடும்” என பகீர் என்று வாய்கூசாமல் பேசியுள்ளார்.

உலக சுகாதார மையமும், உலக நாடுகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுப்பிடிக்க திணறும்வேளையில், இவர் எந்தவித ஒரு அறிவியல் ஆராய்ச்சியுமின்றி, மருத்துவ பரிசோதனை செய்யப்படாத ஒரு தகவலைக் தனது சுய லாபத்திற்காக கிளப்பிவிட்டுள்ளார்.

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ : மக்களை முட்டாளாக்கும் யோகா சாமியார்!

இவரின் இந்த பேச்சு மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்வராமல் எச்சரிக்கையாக இருக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும்தான் யோக தேவைப்படுமே தவிர யோகா மூலம் கொரோனா போன்ற கொடிய தொற்று குணமாகாது. அதற்கு யோகா தேவைப்படாது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியற்காக பாபா ராம் தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories