இந்தியா

“ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு!

ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி இன்று உலகில் உள்ள 180 நாடுகளை தன்வசப்படுத்தியுள்ளது. உலகில் அதிகம் பாதிகப்பட்ட நாடுகளில் 16வது இடத்தில் இந்தியா உள்ளது.

குறிப்பாக, கொரோனா பாதிப்பு தனது இந்தியாவில் தனது தீவிரத்தனமையைக் காட்டத் துவங்கியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்றும், மீறிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே இருந்தன் பொருளாதார பாதிப்பில், கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பேரிழப்பை சந்திக்கின்றனர். ஏழைஎளிய மக்கள் வாழ்வாதமின்றி தவித்துவருகின்றனர். அதன் காரணமாக இந்தியாவில் சில்லரை விற்பனைத் துறையில் வருவாய் இழப்புகள் அதிகரித்துள்ளதோடு, இத்துறையில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

“ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு!

அரசு அறிவித்து நிவாரணம் போதாதநிலையில் மக்கள் உணவுக்காக திண்டாடும் அவநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,“இந்தியாவில் கொரோனா பாதிப்புக் காரணமாக ஊரடங்கில் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியப் பொருளாதராத்தில் 75% க்கும் மேல் பங்களிப்பு செய்யும் வெகுஜன பொருளாதாரத் தொழில்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் வேலைகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் போதுமானது என்று சொல்லும் அளவுக்கு இந்த அரசு ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பணத்தை செலவழிப்பதில் அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். அந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கவேண்டும், அப்போதுதான் அவர்கள் தேவைகள் பூர்த்தியடையும் பொருளாதாரமும் எழும்.

“ஊரடங்கால் தவிக்கும் ஏழைகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு!

இந்தியப் பொருளாதார சரிவு மேலும் பலத்த அடிவங்கியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் இரட்டை அடியாக இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்துள்ளது. ஊரடங்கு எவ்வளவு அவசியமோ அதேப்போல் தொலைநோக்கும் அவசியம். தடுப்புசி கண்டுபிடிக்கும்வரை கொரோனா தனியாது. எனவே தொலைநோக்குத் திட்டங்களை முதலில் வகுக்கவேண்டும்.

அதனால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா தெளிவாக இருக்கவேண்டும். மேலும் இந்த நேரத்தில் பணத்தை கூடுதலாக அச்சடிக்கவும் செய்யலாம். அதில் தவறில்லை. நாட்டு மக்களுக்கு தேவை உறுதியான நிவாரனம். இந்த நேரத்தில் நலத் திட்டங்களுக்கு தகுதியுடையவர்கள் தகுதியற்றவர்கள் என்று பாகுபாடு பார்க்க முடியாது. ஏனெனில் இது அவசரகாலம், நெருக்கடி காலம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories