இந்தியா

வெற்றி பெற வைத்த வட இந்தியர்களை கைவிட்ட தலைவர்கள் : பா.ஜ.க-வின் உண்மை முகத்தைக் காட்டிய கொரோனா!

தங்களது மாநிலங்களை விட்டு டெல்லி, நொய்டா, புனே ஆகிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பால் வேலை இழந்தால் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெற்றி பெற வைத்த வட இந்தியர்களை கைவிட்ட தலைவர்கள் : பா.ஜ.க-வின் உண்மை முகத்தைக் காட்டிய கொரோனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அறிவித்துள்ள இந்த ஊரடங்கால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அறித்த மோடி அரசு ஏழை மக்களை பற்றியும் துளியும் கவலைப்படவில்லை.

குறிப்பாக தினசரி கூலி தொழிலாளர்களால் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலே குடும்பத்தை பாதுகாக்க சிரமப்படும் சூழலில் இருக்கும்பட்சத்தில் இந்த 21 நாட்கள் அவர்கள் என்ன செய்வார்கள். அப்படி எதுவுமே செய்யமுடியாத நிலையில், வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள் தங்கள் சொந்த கிராமத்திற்கு கால்நடையாக செல்லத் துவங்கியுள்ளனர்.

அப்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்களது மாநிலங்களை விட்டு டெல்லி, நொய்டா, புனே ஆகிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்த பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவால் பணி இழந்து, தங்க வசதியின்றி, உணவின்றி செய்வதறியாமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடுமுழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுமார் 200 முதல் 500 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர்.

அதில் உள்ள பெரும்பாலனோர் தங்கள் குழந்தைகளையும் உடமைக்களையும் தூக்கிச் செல்கின்றனர். பல இடங்களில் உணவு இல்லாமல் நடந்ததால் பலர் மயக்கமடைந்த நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அப்படி உத்தர பிரதேசத்தை நோக்கி நடந்த சென்ற தொழிலாளர்களுக்கு சாலை பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியர்கள் உணவு அளித்துள்ளனர்.

அப்போது உணவை பெற்றுக்கொண்ட சப்பிடும் போது அதில் ஒரு தொழிலாளிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. மூன்று நாட்களுக்கு பிறகு இப்போது உணவைக் கண்களில் பார்க்கிறோம். சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் இன்னும் நாங்கள் போகவேண்டியதுள்ளது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சகளை கவலையில் ஆழ்த்துக்கிறது.

இதுமட்டுமின்றி இன்று டெல்லியில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட துவங்கினர். அப்போது அவர்கள் யாருமே சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை. வாழவே வழியில்லாத போது யாருக்குத் தான் தோன்று இந்த சமூக விலகல் கோட்டுபாடு எல்லாம்.

இந்த தொழிலாளர்களின் இந்த நிலைக்கு கொரோனா தான் காரணமா என கேட்டால் நிச்சயம் இல்லை என்றே கூறவேண்டும். கேரளா, தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, கர்நாடக, மேற்கு வங்காளம் என அந்ததந்த மாநில அரசுகள் புலம் பெயர்ந்த தங்கள் மாநில தொழிலாளர்களை மீட்கவும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் வட மாநிலத்தில் 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமைத்தது இருக்கும் மாநில அரசுகளும் சரி, மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசும் சரி அவர்கள் பாதுகாப்பாக அழைத்துவர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குறியது.

வெற்றி பெற வைத்த வட இந்தியர்களை கைவிட்ட தலைவர்கள் : பா.ஜ.க-வின் உண்மை முகத்தைக் காட்டிய கொரோனா!

இந்த தொழிலாளர்களின் ஓட்டைப் பெற்ற எந்த பா.ஜ.க எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வரவில்லை. உணவின்றி தவிக்கும் அவர்களின் அடிப்படைத் தேவை பற்றி தற்போது வரை குரல் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து ராமயணத்தை படமாக ரசித்துகொண்டிர்கிறார்கள்.

இதனைவிட கொடுமை ராமாயணம் ஒளிபரப்பியத்தற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என வாய் கூசாமல் பேசுகிறார்கள். நடந்து செல்லும் அந்த தொழிலாளர்கள் யாருக்கு நன்றி சொல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories