இந்தியா

“ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” : சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை !

ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை போலிஸாருக்கு வழங்கிவிடுவேன் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” : சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய துவங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க துவங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டுமக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்தார். உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிட்டார். தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவந்தாலும் சில மாநிலங்களில் மக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்கவில்லை.

இதனால் தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படுவதாக மாநில அரசுகள் கருதுகின்றனர். குறிப்பாக தெலங்கானாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் செல்வதும், கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதும் செய்திகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை போலிஸாருக்கு வழங்கிவிடுவேன் என மக்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஊரடங்கு உத்தரவை மதிக்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” : சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை !

இதுதொடர்காக வெளியான அறிவிப்பில், தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்; குறிப்பாக ஊர்டங்கு அமலில் உள்ளபோது அரசு விதிமுறைகளைக் கட்டாயம் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

ஆனால், பலர் அஜாகரத்தையாக செயல்படுகின்றனர். அரசு அறிவித்த ஊரடங்கைக் கடைபிடிக்காமல் சுற்றிதிரிந்தால் பின்பு துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை போலிஸாருக்கு வழங்கப்படும்; இல்லையெனில் ராணுவம் வரவழைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற சூழலை ஏற்படுத்தக்கூடாது என்பதே அரசின் நோக்கம். அதனால் மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories