இந்தியா

“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பலனை வரியாக எடுத்துக்கொள்வதா?” : மோடி அரசால் கொதிக்கும் வர்த்தக சங்கம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதெல்லாம், அந்தப் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் மத்திய அரசு வரியாக எடுத்துக் கொண்டது என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பலனை வரியாக எடுத்துக்கொள்வதா?” : மோடி அரசால் கொதிக்கும் வர்த்தக சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையில் தொழில் வணிகத்துறை ஏற்கெனவே தேக்க நிலையில் இருக்கும்போது, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் கச்சா எண்ணெய் மீதான கலால் வரியை மத்திய அரசு திடீரென உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் மக்களைத் தொடர்ந்து பிரச்னைகளுக்கு மத்தியிலேயே வைத்திருக்கும் மோசமான சூழ்நிலை, தானாக உருவாகிறதா? இல்லை உருவாக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் மத்திய அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது அனைவருக்கும் எழுவதில் ஆச்சரியமில்லை.

ஏற்கெனவே, நம் நாட்டின் பொருளா தார வளர்ச்சி மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனா, வேலை வாய்ப்பின்மை, தொழில் வணிக வளர்ச்சியில் தேக்க நிலை மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுப் பாதிப்பு, இவை மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதோடு மக்களை யும் ஒருவித அச்ச நிலைக்கு தள்ளியுள்ளது.

“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பலனை வரியாக எடுத்துக்கொள்வதா?” : மோடி அரசால் கொதிக்கும் வர்த்தக சங்கம்!

சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையேயான போட்டியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக அதிகரித்து, அதன் விலையானது சுமார் 20 வருடசரிவுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரால், டீசல் விலை குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான கலால் வரியை திடீரென ரூ.3 உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வரித்துறை ஆணையகத்தின் உத்தரவின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு வரி லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலில் 4 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது.

கூடுதலாக பெட்ரோல், டீசல் மீதான சாலை வரியும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கலால் வரி உயர்வால் மத்திய அரசின் வருவாய் ஆண்டுக்கு ரூ.39,000 கோடி அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும்போதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உடனே அதிகரிக்கப்படுகின்றன. ஆனால், விலை குறையும்போது மட்டும், அதன் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது.

“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பலனை வரியாக எடுத்துக்கொள்வதா?” : மோடி அரசால் கொதிக்கும் வர்த்தக சங்கம்!

கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எந்த வகையிலும் பெரிதும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக, உற்பத்திச் செலவை வர்த்தக சமவிலையான ‘டிரேட் பேரிட்டி பிரைஸ் (Trade Parity Price - TPP) கணக்கீடுப்படி, இறக்குமதி செய்யப்படும் விலையில், 80 சதவீதமும், அதே பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டால் கிடைக்கும் விலையில், 20 சதவீதமும் சேர்த்து, விலை நிர்ணயம் செய்யப்படுவதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யில் இருந்து, 159 லிட்டர் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும். விலை வீழ்ச்சிக்கு முன், பெட்ரோலின் அடக்க உற்பத்தி செலவு, 30.08 ரூபாய். மார்ச், 12-ம் தேதி நிலவரப்படி 17.79 ரூபாய். இதுதான் அடிப்படை விலை. இதன் மீது தான் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு (VAT)வரியையும் விதிக்கின்றன.

மத்திய அரசு, கலால் வரியாக பெட்ரோல் மீது 19.98 ரூபாயும், டீசல் மீது 15.83 ரூபாயும் வசூலிக்கிறது. இதற்கிடையில், கலால் வரியை, லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் அதிகரித்துவிட்டது. இதன் மீது, தமிழக அரசு மதிப்புக்கூட்டு வரி விதிக்கிறது. அது பெட்ரோலுக்கு 34 சதவீதம், டீசலுக்கு 25 சதவீதம், வரிகளையெல்லாம் அப்படியே வைத்துக் கொண்டாலும், கிட்டத்தட்ட லிட்டருக்கு, 13 ரூபாய் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும்.

2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி வரை கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 9 முறை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதெல்லாம், அந்தப் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் மத்திய அரசு வரியாக எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

“கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி பலனை வரியாக எடுத்துக்கொள்வதா?” : மோடி அரசால் கொதிக்கும் வர்த்தக சங்கம்!

பெட்ரோலும், டீசலும் தான் நம் உற்பத்திக்கான உண்மையான சக்கரங்கள்,‘வாராது வந்த மாமணி’ போல் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி வந்திருக்கிறது. இதன் அத்தனை பயனையும் மத்திய அரசே வைத்துக் கொள்வது என்பது ஏற்புடையது அல்ல. விலை நிர்ணயிப்பதற்கான அடிப்படைக் கணக்கீட்டை மாற்றியமைத்து, 15 நாட்கள் காத்திருப்பை இன்னும் சுருக்கி, கலால் மற்றும் வாட் வரி சதவீதங்களில் மேலும் சலுகை அளித்திட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, தற்போதைய கச்சா எண்ணெய் அதிரடி விலைக் குறைவு பலனை பெட்ரோல், டீசலின் விலையை வெகுவாகக் குறைத்து மக்களுக்கு பெரிய அளவில் சலுகை அளிக்க முடியும். இதன் மூலமே தேக்கத்தில் தத்தளித்து வரும் நம் நாட்டின் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories