இந்தியா

“அறிவுரையைக் கேட்காமல் வரியை உயர்த்திவிட்டார்கள் நமது அறிவாளிகள்” : பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி!

எனது அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது அறிவாளிகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்த மோடி அரசு திடீரென நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்திவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

கலால் வரி உயர்வுக்கு முன்பே ராகுல் காந்தி, சர்வதேச உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் சரிந்துள்ளது. இதனை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். அதனால் பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கு கீழே குறைத்தால் மக்கள் பயனடைவார்கள். அதற்கு முயற்சி எதுவும் எடுப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்த 3 நாட்களில் பா.ஜ.க அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன்களை மக்களுக்கு வழங்கிடுங்கள் என்றால் மேதைகள் கலால் வரியை உயர்த்திவிட்டார்கள் ராகுல் காந்தி எனச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கச்சா எண்ணெய் விலை குறைப்பு பலனை, பொதுமக்களுக்கு அளிக்கும்படி கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

ஆனால், எனது அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது அறிவாளிகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள்” என கிண்டலடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இதுபோல கலால் வரியை உயர்த்தி தன்னுடைய கஜானாவை உயர்த்திக் கொள்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories