இந்தியா

“அரசின் திட்டங்களை தொழில்துறையினருடன் இணைக்க முயற்சி எடுத்தீர்களா?” : மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி!

அரசின் திட்டங்களை, தொழில்துறையினருடனும், கல்வியாளர்களிடமும் இணைக்கும் வகையில் ஏதேனும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா என மக்களவையில் டி. ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க எம்.பிக்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் மக்களவையில் இன்றைய கூட்டத்தில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், அரசின் திட்டங்களை, தொழில் துறையினருடனும், கல்வியாளர்களிடமும் இணைக்கும் வகையில் ஏதேனும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்த்தனிடம் கேள்வி எழுப்பினார்.

“அரசின் திட்டங்களை தொழில்துறையினருடன் இணைக்க முயற்சி எடுத்தீர்களா?” : மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி!

தொழில் துறையில் புதிய உத்திகளை நிறைவேற்றவும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், புதிய வணிக நிறுவனங்களை துவக்குபவர்களுக்கு தேவையான உதவிகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செய்து வருவதாகவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றை செயல்படுத்த 25 தொழில்நுட்ப முன்முயற்சி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்த்தன் மக்களவையில், டி.ஆர்.பாலு எம்.பி கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories