இந்தியா

“நாளின் துவக்கத்திலேயே சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தைகள்”: மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் வேதனை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

“நாளின் துவக்கத்திலேயே சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தைகள்”: மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கின்றன.

குறிப்பாக, இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,590 புள்ளிகள் சரிந்து 34,106-ல் புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து 9,990 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

ஆனால் இந்தச் சூழலில் பொருளாதாரம் மீண்டு எழும், நிச்சயம் பா.ஜ.க ஆட்சியில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயரும் என வழக்கம்போல தங்கள் வசனத்தைப் பேச ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் இதனைப் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

banner

Related Stories

Related Stories