இந்தியா

ஏப்ரல் 15வரை வெளிநாட்டினர் இந்தியா வர தடை... IPL தொடர் நடக்குமா? நடக்காதா?

ஏப்ரல் 15ம் தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏப்ரல் 15வரை வெளிநாட்டினர் இந்தியா வர தடை... IPL தொடர் நடக்குமா? நடக்காதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும், சென்னை அணியும் வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் உள்ள மக்களை தொற்றி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் பல்வேறு நாடுகளில் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவையும் விட்டுவைக்காத இந்த கொரோனா வைரஸால் இதுவரை 73 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 15வரை வெளிநாட்டினர் இந்தியா வர தடை... IPL தொடர் நடக்குமா? நடக்காதா?

இந்நிலையில், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், இன்னும் ஒரு மாதத்திற்கு அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விசா உரிமமும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஐ.பி.எல் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வார காலமே உள்ள நிலையில், இதில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை தடை செய்யப்பட்டுள்ள விசா உரிமம் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்கள் இந்தியா வந்து போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடக்கும் என பி.சி.சி.ஐ நம்பிக்கையுடன் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐ.பி.எல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்க ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு நாளை மறுநாள் கூடுகிறது. இந்த கூட்டத்தின் முடிவிலேயே ஐ.பி.எல் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.

ஏப்ரல் 15வரை வெளிநாட்டினர் இந்தியா வர தடை... IPL தொடர் நடக்குமா? நடக்காதா?

ஏப்ரல் 15வரை வீரர்களுக்கு இந்தியா வர அனுமதி இல்லை என்று கூறியிருக்கும் பட்சத்தில், ஐ.பி.எல் போட்டிகளை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஒருபுறம் கொரோனா தாக்கத்தால் ஐ.பி.எல் நடக்குமா, இல்லையா என்ற அச்சம் தொடரும் நிலையில், ரசிகர்களோ ஐ.பி.எல் போட்டி கண்டிப்பாக வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

ஐ.பி.எல் திட்டமிட்டபடி நடைபெறுமா, சிறப்பு அனுமதி மூலம் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்து போட்டியில் பங்கேற்பார்களா போன்ற பல கேள்விகளுக்கு நாளை மறுநாள் நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சிமன்றக் கூட்டத்தில் விடை தெரிந்துவிடும்.

banner

Related Stories

Related Stories