இந்தியா

19 லட்சம் பேரை வெளியேற்ற முடியாது; சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேளுங்கள் : மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை!

19 லட்சம் பேரை எந்த நாடாலும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. மோடிக்கு சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேட்டு தெரிந்துகொள்ளட்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

19 லட்சம் பேரை வெளியேற்ற முடியாது; சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேளுங்கள் : மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மன்றம் சார்பில் அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய ப.சிதம்பரம், “மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. நுகர்வு சக்தி 3.7 சதவிகிதம் குறைந்துவிட்டது. பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அதைப்பற்றி பேசாமல் மக்களை பாதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

குடியுமை இல்லாத மக்களை குறிப்பாக, அசாமின் 19 லட்சம் மக்களை வெளியேற்ற நாடு ஒன்றுகூட இல்லை. வேண்டுமென்றால் நாளை வரக்கூடிய டிரம்பைக் கேளுங்கள். 19 லட்சம் பேரை எப்படி வெளியேற்ற முடியும். கப்பலிலா? விமானத்திலா? அல்லது வங்கக்கடலில் தூக்கி எறிந்து விடுவீர்கள்.

19 லட்சம் பேரை வெளியேற்ற முடியாது; சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேளுங்கள் : மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை!

இந்திய மக்களை இந்தச் சட்டம் பாதிக்காது என்றால் ஆப்பிரிக்க மக்களையா பாதிக்கும்? மத்திய அரசு தவறு செய்தால்கூட மன்னிக்கலாம். ஆனால் பொய் சொல்கின்றனர். 19 லட்சம் பேரை எந்த நாடாலும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. மோடிக்கு சந்தேகம் இருந்தால் நாளை இந்தியா வரும் டிரம்பைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களில் டிரம்ப்பால் ஒருவரையாவது வெளியேற்ற முடிந்ததா?

நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டம் இஸ்லாமியர்களுக்கும் இந்திய அரசுக்கு நடைபெறும் போராட்டம் இல்லை, இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கு நடைபெறும் போராட்டம். இன்று இஸ்லாமியர்களுக்கு வந்த பிரச்சனை நாளை நமக்கும் வரும், 70 ஆண்டு அரசியல் சாசனத்தை 72 மணி நேரத்தில் குழி தோண்டி புதைவிட்டது மத்திய பா.ஜ.க அரசு.

முதல் குடியுரிமை சட்டம் நிறைவேற மூன்று மாதங்கள் ஆனது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டம் 3 நாட்களில் மதத்தை கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 3 அண்டை நாடுகளை மட்டும் சேர்த்துள்ளார். ஆனால் இலங்கை பூட்டான், மியான்மர், சீனா போன்ற அண்டை நாடுகளை ஏன் சேர்க்கவில்லை?

19 லட்சம் பேரை வெளியேற்ற முடியாது; சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேளுங்கள் : மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை!

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இன்று உலக நாடுகள், இந்திய அரசை கேள்வி கேட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, வங்கதேசத்தை ஏழை நாடு என கிண்டல் செய்தோம். ஆனால் வங்கதேசம் தற்போது இந்தியாவுக்கு இனையாக வளர்ந்து வருகிறது. வங்கதேசத்து தனிநபர் வருமானம் இந்தியாவுக்கு ஈடாக உள்ளது. இங்கிருந்து வங்கதேசம் செல்லும் சூழ்நிலை வரலாம் என கூறுகின்றனர்.

என்.பி. ஆர்., மூலம் விஷமத்தனமான கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். தந்தை எங்கே பிறந்தார், தாய் எங்கே பிறந்தார், தாய் மொழி என்ன, ஆதார் எண் என்ன? எனக் கேட்கிறார்கள்.

ஒருவரை நேரடியாக அந்நியர் என்று சொல்ல முடியவில்லை என்றால் தாய், தந்தை மூலம் அந்நியர் என சொல்ல வைக்கக் கூடிய முயற்சி தான் என்.பி.ஆர்.

எனவே, என்.பி.ஆரை கைவிட வேண்டும். சென்சஸ் மட்டும் போதும். என்.ஆர்.சியை எக்காலத்திலும் கூடாது , சி.ஏ.ஏ., ரத்து செய்ய வேண்டும். அல்லது உச்ச நீதிமன்றமாவது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories