இந்தியா

“இந்தியை தோற்கடித்த சந்தாளி” : 19ம் நூற்றாண்டு வரை எழுத்து வடிவமில்லாத மொழி பற்றிய சுவாரஸ்ய தகவல்!

விக்கிப்பீடியா மற்றும் கூகுள் நடத்திய போட்டியில் இந்தியை தோற்கடித்த சந்தாளி மொழி பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இது.

“இந்தியை தோற்கடித்த சந்தாளி” : 19ம் நூற்றாண்டு வரை எழுத்து வடிவமில்லாத மொழி பற்றிய சுவாரஸ்ய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இணையதளங்களில் மொழிகளின் தரவுகளை அதிகரிப்பதற்காக விக்கிப்பீடியா மற்றும் கூகுள் இணைந்து ‘வேங்கை 2.0 (Tiger 2.0) என்ற பெயரில் போட்டி ஒன்றை சமீபத்தில் நடத்தினர்.

கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் இந்திய மொழிகளில் எழுதும் பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் தமிழ், பஞ்சாபி, மராத்தி, உருது, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்திய மொழிகளுக்கிடையே நடந்த போட்டியின் இறுதியில் ஏனைய மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி 62 பேர் பங்கேற்று 2,959 கட்டுரைகள் எழுதி தமிழ் மொழி முதலிடம் பெற்றது. அதனையடுத்து 1,768 கட்டுரைகள் எழுதி பஞ்சாபி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

“இந்தியை தோற்கடித்த சந்தாளி” : 19ம் நூற்றாண்டு வரை எழுத்து வடிவமில்லாத மொழி பற்றிய சுவாரஸ்ய தகவல்!

தமிழ் மொழியுடன் போட்டிபோடும் இந்தியில் 417 கட்டுரைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் வெறும் 4 பேர் பங்கேற்று 19 கட்டுரைகள் மட்டுமே எழுதியதால் அம்மொழி கடைசி இடம் பெற்றுள்ளது.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியை திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியையும் பின்னுக்கு தள்ளியது சந்தாளி மொழி. இதுவரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிராத இந்த சந்தாளி மொழி இந்தியை தோற்கடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த சந்தாளி மொழி குறித்து ஆராய்ந்தபோது பல சுவாரஸ்யத் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சுமார் 7.6 மில்லியன் மக்களால் இந்த சந்தாளி மொழி பேசப்படுகிறது. இந்த மொழி முண்டா மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஆஸ்திர - ஆசிய நாடுகளில் பேசப்படும் மொழி எனவும் தெரியவந்துள்ளது.

சந்தாளி மொழியின்
 'ஓல் சிக்கி' என்ற எழுத்து வடிவம்
சந்தாளி மொழியின் 'ஓல் சிக்கி' என்ற எழுத்து வடிவம்

அதுமட்டுமின்றி, இம்மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த மொழி இந்தியாவின் அசாம், பீகார், ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது. இம்மொழி பேசுபவர்களின் படிப்பறிவு மிகக் குறைவாக, அதாவது 10 - 30% விழுக்காடாகவே உள்ளது.

மேலும், இது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 பிராந்திய மொழிகளில் சந்தாளியும் ஒன்றாகும். இது ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் இரண்டாவது மாநில மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

19-ம் நூற்றாண்டு வரை சந்தாளிக்கு எழுத்து வடிவம் இல்லை. 1925இல் மயூர்பஞ்ச் கவிஞர் ரகுநாத் முர்முவால் சந்தாளிக்காக 'ஓல் சிக்கி' என்ற எழுத்து முறை உருவாக்கப்பட்டது .

அப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழி, ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இந்தியை வீழ்த்தி ஆன்லைனில் தனது முத்திரையைப் பதித்திருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பழங்குடியின மக்களால் பேசப்படும் முண்டா மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சந்தாளி மொழி, கடந்த 2019-ம் ஆண்டு தான் டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் முதன்முதலாகப் பேசப்பட்டது.

பிரந்திய மொழிகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்காகவே அதிக நிதியை ஒதுக்கும் மோடி அரசு இனியாவது திருந்தவேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தங்களது தாய்மொழியை பொதுசமூகத்திற்கு தெரியப்படுத்த அதற்கான முயற்சி எடுத்த சந்தாளி மொழி பேசும் மக்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகின்றன.

banner

Related Stories

Related Stories