இந்தியா

“மலைக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் 3,350 டன் தங்கம்”: உ.பியில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“மலைக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் 3,350 டன் தங்கம்”: உ.பியில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் தங்கச் சுரங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனமும், உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகமும் உறுதி செய்துள்ளன.

இந்த சுரங்கங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ என்ற இடத்தில் மட்டும் 2,700 டன் அளவுள்ள தங்கப் படிமங்களும், ஹார்டீ என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்கப் படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான வயல்கள் அமைக்கும் பணியில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது. மேலும் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்போவதாகவும், அதற்காக 7 கொண்ட உறுப்பினர் குழுவை அந்த மாநில அரசு அமைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உலக தங்கக் கூட்டமைப்பின்படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகில் உள்ள தங்கத்தின் அளவில் 6.6 சதவீதமாகும். உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்காக அதிகரிக்கும். இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரம் மீள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories