இந்தியா

“எனது நண்பர் பரூக் அப்துல்லா மக்களவைக்கு எப்போது வருவார்?” : நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் கேள்வி!

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார் என்று முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார்.

“எனது நண்பர் பரூக் அப்துல்லா மக்களவைக்கு எப்போது வருவார்?” : நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 11ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், மார்ச் 2 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 2வது கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் மற்றும் மகாத்மா குறித்த பா.ஜ.க எம்பி.யின் சர்ச்சைக் கருத்து போன்ற விவகாரங்களால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.

பல எம்.பி.,க்களின் கேள்விக்கு பதில் அளிக்காமலும் ஒத்திவைப்பு தீர்மானத்தையும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடந்தது.

“எனது நண்பர் பரூக் அப்துல்லா மக்களவைக்கு எப்போது வருவார்?” : நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் கேள்வி!

இந்தக் கூட்டத்தில் காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எப்போது வெளியே வருவார் என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாகப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். “எனது நண்பர் பரூக் அப்துல்லா வழக்கமாக எனது அருகே அமருவார். அவர் எப்போது மக்களவைக்கு வருவார் ?” என்று கேட்டார்.

ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாமல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அலட்சியப்படுத்தி, அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை எம்.பி.,க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories